இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 10:29AM by PIB Chennai
இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான விரிவான சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், கிக், நடைபாதை தொழிலாளர்களுக்கான தேசிய சமூக பாதுகாப்பு வாரியத்தை அமைத்துள்ளது. சமூக பாதுகாப்புச் சட்டம் என்ற கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாரியங்கள் டிஜிட்டல் கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களை நலன் சார்ந்த கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சரின் தலைமையில் இயங்கும் இந்த வரியங்களில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், முன்னணி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், கிக், நடைபாதை தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
பாரம்பரிய அமைப்புசாரா தொழிலாளர்கள், லட்சக்கணக்கான கிக், நடைபாதை தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையேயான சமூக பாதுகாப்பு இடைவெளியை களையும் வகையில் இலக்குடன் கூடிய நலத்திட்டங்களை வடிவமைக்கவும், கண்காணிக்கவும், பரிந்துரைக்கவும் இந்த வாரியங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய சமூக பாதுகாப்பு வாரியங்கள் ஆண்டொன்றுக்கு மூன்று முறையாவது ஆலோசனை கூட்டங்களை நடத்தும் இதில் மேற்கொள்ளப்படும் முடிவுகள், செயல்பாடுகள் மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறை சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330299®=48&lang=1&_gl=1
***
SS/SV/PS