பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-அமெரிக்கா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில், சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பிற்கு முக்கிய அடித்தளமாகத் திகழ்கிறது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 2:44PM by PIB Chennai

இந்தியா-அமெரிக்கா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில், சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பிற்கு முக்கிய அடித்தளமாகத் திகழ்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்  தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் உள்ள செபுவில் 2026 அக்டோபர் 28 அன்று நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக,  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  திரு பீட் ஹெக்சேத்துடன் பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பு இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான, முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

இதனைப் பிரதிபலிக்கும் வகையில், இரு தரப்பினரும் தங்களது  அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களின் செயல்பாட்டுத் தயார்நிலை, தொழில்நுட்பப் பகிர்வு, பாதுகாப்பு தொழில்துறை ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது பிராந்திய பாதுகாப்பு குறித்தும் மறுஆய்வு செய்யப்பட்டது. இரு நாடுகளும் உலகளவில் பயங்கரவாத செயல்களின் அச்சுறுத்தலை களைவதில், ஒருங்கிணைந்த தீர்மானத்தை வலுவாக வலியுறுத்தின.

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும், பயிற்சியளிக்கும் அல்லது நிதியளிக்கும் நாடுகளிடம் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவை அளிக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ஹெக்சேத் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த உறுதியான ஆதரவிற்கு திரு ராஜ்நாத் சிங்  பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329441&reg=3&lang=1   

***

SS/SV/RJ  


(வெளியீட்டு அடையாள எண்: 2329696) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam