இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 12:16PM by PIB Chennai
அறிவியில் ரீதியிலான நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டமிடலுக்கு ஆதரவளிக்கும் வகையில், பிஸாக்-என் நிறுவனம் மூலம் தேசிய நீர்வள இயக்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள புனா பாரன் என்ற மொபைல் சேவையை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த மொபைல் சேவை 3 கிலோமீட்டர் வரையிலான தொலைவிற்குள் வாய்ப்புடைய செயற்கை செறிவூட்டல் பகுதிகளை கண்டறியவும், உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் உரிய செறிவூட்டல் கட்டமைப்புகளை கண்டறியவும் உதவுகிறது.
இந்த இணையதளம் கிராம அளவிலான செயற்கை செறிவூட்டல் கட்டமைப்பு பகுதி வரைபடங்கள், புவியியல் தகவல் அமைப்பு உபகரணங்கள் ஆகியவற்றுக்கான அணுகலை அளிக்கிறது. இது நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மைக்கான தகவல் அறியும் திட்டமிடலுக்கு ஆதரவளிக்கிறது.
இந்த தளம் செறிவூட்டல் சாத்தியக்கூறு உள்ள பகுதிகள், பொருத்தமான நடைமுறைகள் ஆகியவற்றிற்கு உதவுவதற்காக மழைப்பொழிவு, நிலத்தடி நீர் மட்டம் உள்ளிட்ட புவிசார் தரவுத் தொகுப்புகளை பயன்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329354®=3&lang=1
***
SS/IR/LDN/GS