இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 10:25PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை அள்ளிக்குவித்ததை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். குறிப்பாக, சுமித் தங்கப் பதக்கம் வென்றதையும், மகேந்திர குர்ஜார் புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றதையும், சந்தீப் சஞ்சய் சர்கார் சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றதையும் அவர் சிறப்பித்துக் கூறினார்.
இந்தச் சாதனை இந்திய பாரா தடகளத்திற்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும், அந்த வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை மேம்படுத்தி தேசத்திற்கு உத்வேகம் அளிப்பார்கள் எனவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை முழுமையாக வென்று சாதனை படைத்துள்ளது!
தங்கம் வென்ற சுமித்துக்கும், புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற மகேந்திர குர்ஜாருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் சஞ்சய் சர்க்காருக்கும் வாழ்த்துகள். இது இந்திய பாரா தடகளத்திற்கு ஒரு பெருமைக்குரிய தருணம். அவர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை மேம்படுத்தி, தேசத்திற்கு உத்வேகம் அளிக்கட்டும்: பிரதமர் @narendramodi"
****
(Release ID : 2327738)
AD/PLM/ RJ