இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 10:47AM by PIB Chennai
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு ரயில்வே காவல் துறைத் தலைவர்களின் 8-வது அகில இந்திய மாநாடு, 2026 அக்டோபர் 23 அன்று புது தில்லியில் நிறைவடைந்தது.
அதிகரித்து வரும் பாதுகாப்புச் சவால்கள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவது, ஆர்பிஎப், ஜிஆர்பி, மாநில காவல் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவது ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாக இந்த மாநாடு அமைந்தது.
ரயில்வே காவல்படையின் தலைமை இயக்குநர் திருமதி சோனாலி மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலை அதிகாரிகள் மாநாட்டில், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு சதீஷ் குமார், ரயில்வே வாரிய உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ரயில்வே காவல் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் மூலம், அரசு ரயில்வே ஜாவா ஜிஆர்பி பணியாளர்கள் 'ரயில்மதத்' என்ற தளத்தில் இணைக்கப்பட்டனர்.
இது பயணிகளின் குறைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்தவும், தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளவும், புகார்களைக் கண்காணிப்பதற்கும் உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327812®=3
****
AD/SV/RJ