இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 6:52PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
அவரது இந்தச் செயல்பாடு இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, புதிய உச்சங்களை எட்டி, நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைத் தேடித்தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! அவரது இந்தச் செயல்பாடு இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, புதிய உச்சங்களை எட்டி, நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைத் தேடித் தர வேண்டும்: பிரதமர்".
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327545®=3&lang=1
(Release ID: 2327545)
****
TV/SV/SH