பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சோலைராஜ் தர்மராஜுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 9:54PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதல் டி44/டி62/டி64 பிரிவில் அபாரமான தாண்டுதலுடன் தங்கப் பதக்கம் வென்று, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய சோலைராஜ் தர்மராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமது முந்தைய ஆசிய சாதனையை முறியடித்ததன் மூலம், தமது அபாரமான திறமையையும் உறுதியையும் மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதல் டி44/டி62/டி64 பிரிவில் சோலைராஜ் தர்மராஜ் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி, தமது அபாரமான தாண்டுதலின் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தமது முந்தைய ஆசிய சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தமது அபாரமான திறமையையும் உறுதியையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இந்த மிகச்சிறந்த வெற்றிக்கு சோலைராஜுக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் : பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2327003)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327641) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam