பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சின்மயா அமிர்தப் பெருவிழா உலக மாநாட்டை பிரதமர் அக்டோபர் 23 அன்று தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 3:45PM by PIB Chennai

சின்மயா அமிர்தப் பெருவிழா உலக மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 அக்டோபர் 23 அன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

அக்டோபர் 25 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 9,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். 1951-ம் ஆண்டு சுவாமி சின்மயாநந்தாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய ஆன்மீக இயக்கமான சின்மயா இயக்கத்தின் 75-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வந்த கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.

வேதாந்தத்தையும், பகவத் கீதையின் ஞானத்தையும் அனைவரும் அறிந்துகொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல சதாப்தங்களாக ஆன்மீக கல்வி, கலாச்சாரப் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், சமூக சேவை ஆகிய துறைகளில் இந்த இயக்கம் தனது பணிகளை விரிவுபடுத்தியுள்ளது.  

தமிழ்நாட்டின் கங்கைக்கொண்ட சோழபுரத்தில் இளையராஜா இசையில் சின்மயா இயக்கம் தயாரித்த பகவத் கீதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை பிரதமர் வெளியிட்டதோடு, இக்கொண்டாட்டம் தொடங்கியது. ஓராண்டு காலத்தில் பல்வேறு முன்முயற்சிகளும், நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. அவற்றில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஹோமங்கள், திரிபுராவில் அன்னை செளந்தர்யா சின்மயி கோயிலின் கும்பாபிஷேகம், உலக நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணையவழியில் இணைந்து பகவத் கீதையின் 15-வது அத்தியாயத்தைக் கூறிய சின்மயா கீதா சமர்ப்பணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இக்கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக, பகவத் கீதையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஸ்லோகங்களைக் கொண்ட கீதா பஞ்சாமிர்தம் என்ற முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் கீதையின் செய்தியைப் பரப்பும் நோக்கில் சின்மயா இளையோர் மையத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் சின்மயா அமிர்த யாத்திரையாக நாடு முழுவதும் 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேலான தொலைவிற்குப் பயணம் மேற்கொண்டனர்.

***

(Release ID: 2326606)  

SS/IR/RJ/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2326913) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam