இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 9:26PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவர் 100 மீட்டர் நீச்சல் பிரஸ்ட்ரோக் எஸ்பி4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது முதல் பங்கேற்பிலேயே பதக்கம் வென்றிருப்பது சாதனையை மிகவும் சிறப்பானதாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், ரோஹித்தின் அற்புதமான செயல்பாடுகளை பாராட்டினார்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ரோஹித் குமாருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்! 2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவர் 100 மீட்டர் நீச்சல் பிரஸ்ட்ரோக் எஸ்பி4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது அற்புதமான தருணம். குறிப்பாக, தனது முதல் பங்கேற்பிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். ரோஹித்தின் அற்புதமான செயல்பாடுகளுக்கு எனது பாராட்டுகள்”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326256®=3&lang=1
***
TV/LN/SH