இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 8:14PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் டி12 பிரிவில் தங்கம் வென்று புதிய விளையாட்டு சாதனை படைத்த சிம்ரனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வேகம், உறுதிப்பாடு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை என்றும், வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துவதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் தங்கம் வென்று, புதிய விளையாட்டு சாதனையைப் படைத்த சிம்ரனுக்கு வாழ்த்துகள்! அவரது வேகம், உறுதி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி"
(Release ID : 2326163)
TV/PLM/SH