குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

65-வது தேசிய கலைக் கண்காட்சியில் தேர்வான கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 3:08PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் 2026 அக்டோபர் 21-ம் தேதியன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்று, 65வது தேசிய கலைக் கண்காட்சியில் தேர்வான கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கினார். மேலும், கலைக் கண்காட்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய குடியரசு தலைவர், இந்திய அச்சுக்கலையில் சிறந்து விளங்கியவர்களை கவுரப்படுத்தினார்.

இவ்விழாவில் உரையாற்றிய குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இந்தியாவின் கலை மரபு, கலாச்சார பன்முகத்தன்மை, சமகால படைப்பாற்றல் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக இந்த விழா அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். பல்வேறு முறையில் வரையப்படும் ஓவியங்கள், கற்களில் செதுக்கப்படும் சிற்பங்கள், வேறு ஊடகங்களால் உருவாக்கப்படும் படைப்புகள் மட்டுமே கலை கிடையாது என்றும், கலைக்கு எல்லை இல்லை எனவும் தெரிவித்தார்.

கலை என்பது நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என குறிப்பிட்ட குடியரசு தலைவர், நமது கடந்தகால நினைவுகளை பிரதிபலிப்பதாகவும், நிகழ்கால அனுபவமாகவும், எதிர்கால விருப்பத்திற்குரியதாகவும் கலை விளங்குவதாக கூறினார். குக்கிராமங்களில் வசிக்கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடனும், சமகால கலைகள் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் எனவும் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிவுறுத்தினார். கலைஞர்களின் படைப்பாற்றலுக்கான வாய்ப்பை மட்டும் அளிப்பது மட்டுமின்றி,  அதன்மூலம் அவர்களுக்கு பொருளாதார தேவைக்கும் உதவியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அவர்களது படைப்புகளை சந்தைப்படுத்துவதற்கான மார்க்கெட்டை உருவாக்கி தர வேண்டும் என்றும் கூறினார். கலைப்படைப்புகளை விற்பனை செய்ய கலைஞர்களுக்கு உறுதுணையாக இருந்த லலித் கலா அகாடமி, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

கலை என்பது கலைக்கூடங்களில் இருப்பது மட்டுமல்ல, அது பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்களையும் சென்றடைய வேண்டும் என்றும் குடியரசு தலைவர் தெரிவித்தார். இளைஞர்கள்,  கலைஞர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முதலீட்டாளர்கள் உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325915&reg=3&lang=1   

***

SK/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326536) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Malayalam , Bengali , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati