பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 6:50PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்53/54 பிரிவில் சிறந்த சாதனையைப் பதிவுசெய்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் அடைந்துவரும் முன்னேற்றம், தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நிலைத்தன்மையும் சிறப்பும் ஒன்றாக இணைந்து பிரகாசிக்கும் பாராட்டத்தக்க இந்தச் செயல்திறனுக்காகத் தமது வாழ்த்துகளையும், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் தனது நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நிலைத்தன்மையும் சிறப்பும் ஒன்றாக இணைந்து பிரகாசிக்கும் சாதனை!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 53/54 பிரிவில், தமது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவுசெய்து, பிரதீப் குமார் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பல ஆண்டுகளாக அவர் அடைந்துவரும் முன்னேற்றம், தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பாராட்டத்தக்க இந்தச் செயல்திறனுக்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

****

(Release ID: 2325498)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325559) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam