பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனல்பென் படேலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 6:48PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ல் வெண்கலப் பதக்கம் வென்ற சோனல்பென் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது விளையாட்டுப் பயணத்தின் இந்த சிறப்புமிக்க தருணம், பல ஆண்டுகால அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் சாத்தியமானது என்று கூறி, அவருக்குத் தமது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சோனல்பென் படேலின் வெற்றியால் மகிழ்ச்சி! அவர் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பிரிவு 3-ல் வெண்கலப் பதக்கம் வென்று, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது விளையாட்டுப் பயணத்தின் ஒரு சிறப்புமிக்க தருணம். பல ஆண்டுகால அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் இது சாத்தியமானது: பிரதமர் @narendramodi"

****

(Release ID: 2325497)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325522) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam