வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா –நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 20 அன்று நடைமுறைக்கு வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 7:27PM by PIB Chennai

இந்தியா–நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் 2026 அக்டோபர் 20-ம் தேதியன்று நடைமுறைக்கு வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலும்,  நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் திரு டாட் மெக்லேவும், காணொலி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில், கூட்டாக அறிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய  திரு பியூஷ் கோயல், “இந்தக் கூட்டு முயற்சி, ஒரு வெற்றிகரமான கூட்டணியாகும்.  இந்தியாவைப் பொறுத்தவரை, நியூசிலாந்து சந்தையில் 100% வரி இல்லாத அணுகுமுறை கிடைப்பது, நமது ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள், பெண் தொழில்முனைவோருக்குப் புதிய மற்றும் முக்கியமான வாய்ப்புகளை வழங்குகிறது. நமது விவசாயிகளைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளுடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. பிரதமரின் ‘2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்த ஒப்பந்தம் ஒத்துப்போகிறது”, என்று கூறினார்.

“இந்த ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நியூசிலாந்தின் மற்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பங்காளிகளுடன் அவர்களைச் சமமாக நிலை நிறுத்தும்” என்று நியூசிலாந்து அமைச்சர் திரு  டாட் மெக்லே குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325235&reg=3&lang=1

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325492) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada , Malayalam