பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 10:09PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

நிஷாத் குமார், தனது முதல் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றது, இந்தச் சாதனையை மேலும் சிறப்பானதாக்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். அவரது பன்முகத் திறனையும், மன உறுதியையும்  விளையாட்டுத் திறனையும் பாராட்டிய பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

 

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், ஆடவர் நீளம் தாண்டுதல் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிஷாத் குமாரைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.  தனது முதல் போட்டியிலேயே அவர் தங்கப் பதக்கம் வென்றிருப்பது, இந்த சாதனையை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது பன்முகத்திறன், மன உறுதி, விளையாட்டுத் திறன் ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325315&reg=3&lang=1

***

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2325431) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Kannada , Malayalam