குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விஜயதசமியையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 7:02PM by PIB Chennai

 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, விஜயதசமியையொட்டி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விஜயதசமியையொட்டி குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"விஜயதசமி எனும் மங்களகரமான நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயதசமி பண்டிகைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அது ராவணனை  பகவான் ஸ்ரீ ராமர் வென்றதைக் குறிக்கிறது. பகவான் ஸ்ரீ ராமர் நீதி, ஒழுக்கம் ஆகியவற்றின் வடிவமாகப் போற்றப்படுகிறார். இந்தப் பண்டிகை, அதர்மம், அநீதி ஆகியவற்றை தர்மமும் நீதியும் வென்றதைக் கொண்டாடுகிறது.

இந்தியப் பண்பாடு, அறம், கடமை ஆகிய லட்சியங்களில் இது வேரூன்றியுள்ளது. இந்தத் தருணத்தில், நமது பண்பாட்டு மரபுகளின் உன்னத லட்சியங்களைப் பேணி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தையும் வளர்ச்சியடைந்த இந்தியாவையும் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்க நாம் உறுதியேற்போம்.

இந்த புனிதமான நல்ல தருணத்தில், அனைத்து மக்களின் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

****

(Release ID: 2325228)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325274) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam