நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு, தில்லி விமான நிலையங்களிலும், நாக்பூர் அருகேயும், சுமார் 10 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் - 3 பேர் கைது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 4:23PM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தனது புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு நடவடிக்கைகளில் சுமார் 7.1 கிலோ ஆம்பெடமைனும், மற்றொரு நடவடிக்கையில் சுமார் 3.1 கிலோ கொக்கைனும் பறிமுதல் செய்யப்பட்டது.

கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில், 2026 அக்டோபர் 14 அன்று பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை அதிகாரிகள் சோதனையிட்டபோது 5.166 கிலோகிராம் ஆம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

 மற்றொரு நடவடிக்கையில், நாக்பூரின் புறநகர்ப் பகுதியான சாவ்னரில் 1.97 கிலோகிராம் ஆம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு உளவுத் தகவலின் அடிப்படையில் புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3-க்கு வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது மொத்தம் 3.134 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325126&reg=3

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325191) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada