ரெயில்வே அமைச்சகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியினர் மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவுடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 7:09PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணியினரை ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டினார்.
புதுதில்லியில் தம்மை சந்தித்த அணியினருடன் அவர் கலந்துரையாடினார். ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்த அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய ரயில்வேயைச் சேர்ந்த வீராங்கனைகளின் இந்தச் சாதனையைப் பாராட்டிய பேசிய மத்திய அமைச்சர் திரு. வைஷ்ணவ், அவர்களின் அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் விளையாட்டுத் திறன் மூலம் இந்திய மூவர்ணக் கொடியைப் பெருமைப்படுத்தியதற்காகவும், நாட்டிற்குப் பெருமை சேர்த்ததற்காகவும் அவர்களை வாழ்த்தினார். இந்திய அணிக்கு நீதா மோரேஷ்வர் டாட்வே பயிற்சியாளராகவும், புஷ்பா ராணா கேப்டனாகவும் செயல்பட்டனர்.
இந்திய ரயில்வே, 'ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்' மூலமாக விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுத்து வருவதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324508®=3&lang=1
செய்தி அடையாள எண்:2324508
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324709)
வருகையாளர் எண்ணிக்கை : 8