குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இசையமைப்பாளர் தேவா மறைவுக்குக் குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 3:39PM by PIB Chennai

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

"இசையமைப்பாளர் திரு தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

 

எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசை மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் திரு தேவா அவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.

 

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்குப் பேரிழப்பாகும்.

 

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

 

(Release ID : 2324658)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324698) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam