இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2026 9:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியின் 136-வது அத்தியாயத்தில் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
நமது நாட்டை பாதுகாத்து மென்மேலும் வலிமையாக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த செய்தியை எளிமையான முறையில் நம் அனைவருக்கும் தெரிவிக்கிறது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதில் சிறப்பாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி சிறப்பானதாகும். அந்த வெற்றி ஒரு புகழ்பெற்ற மைதானத்தில் கிடைக்கும்போது மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி லாட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றியின்போது இந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது. இந்திய மகளிர் அணிக்கு எனது நல்வாழ்த்துகள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கால்பந்து விளையாட்டில் சமஸ்கிருத மொழியை இணைக்கும் ஒரு தனித்துவம் வாய்ந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் அறிவியில், விண்வெளித் துறைக்கு மிகச் சிறப்பான மாதமாக அமைந்தது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேவேளையில் பல்வேறு ஒலிம்பியாட் போட்டிகளில் கிடைத்துள்ள வெற்றிகள் அறிவியல் துறையில் சிறந்த விளங்க மேலும் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
ஜம்மு காஷ்மீரில் வாகூ எனப்படும் கைகளால் பின்னப்படும் பாரம்பரிய பாய் முடையும் தொழிலை மீண்டும் உயிர்ப்பித்து பிரபலப்படுத்தும் முயற்சி பெருமைக்குரியதாகும். உங்கள் வீடுகளில் இத்தகைய பாரம்பரியம் மிக்க பாய் ஒன்றை வாங்கி பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் இயற்கையின் மீது நாம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வெற்றிகளும், சாதனைகளும் குவிந்தபோதிலும் ஒருவர் எப்போதும் தனது அடிப்படை பண்புகளுடன் இணைந்தே இருக்க முடியும் என்பதை டாக்டர் ரொனால்டோ லைஷ்ராமின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
காதி துறை குறிப்பிடத்தக்க அளவில் மறுமலர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் காதி தயாரிப்புகளின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. மக்களிடையே காதி தயாரிப்புகள் மீது அதிகரித்துவரும் இத்தகைய வரவேற்பு உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதுடன், எண்ணற்ற கைவினைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குகிறது. வரும் பண்டிகை காலங்களில் நாம் அனைவரும் குறைந்தது ஒரு காதி தயாரிப்பையாவது வாங்கி உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு வழங்கும் இயக்கத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த திரு சுர்ஜா குமார் டெப்பார்மா சோங்பிரெங் என்ற இசைக்கருவியை பிரபலப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. நம் நாட்டின் இசை பாரம்பரியம் பல ஆண்டுகளாக எவ்வாறு உயிர்ப்புடன் திகழ்கிறது என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
(Release ID: 2289709)
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289709®=48&lang=2
***
TV/SV/LDN/SH