ஆயுஷ்
ஆயுஷ் மருத்துவத்தில் பத்து ஆண்டுகளில் 4,077 காப்புரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 2:33PM by PIB Chennai
11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்களின் போது வெளியிடப்பட்ட, இந்தியாவில் ஆயுஷ் தொடர்பான கண்டுபிடிப்புகள் குறித்த நிலை அறிக்கை 2014–2026-ன் படி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆயுஷ் தொடர்பான புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளன. 2014–15-ம் நிதியாண்டுக்கும் 2025–26-ம் நிதியாண்டுக்கும் இடையில் 4,077 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு, 711 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
2014-15-ம் நிதியாண்டில் 63 விண்ணப்பங்களாக இருந்த வருடாந்திர விண்ணப்பங்கள், 2025-26-ம் நிதியாண்டில் 590 விண்ணப்பங்களாக உயர்ந்துள்ளன. இது சுமார் 836.5 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஆயுஷ் துறைக்கான மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இது குறித்துக் கூறுகையில், ஆயுஷ் தொடர்பான காப்புரிமை விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சியானது, ஆயுஷ் துறையில் ஆராய்ச்சி மீது அதிகரித்து வரும் கவனத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324293®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324422)
வருகையாளர் எண்ணிக்கை : 8