கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு அளிக்கப்பட்ட நினைவு பரிசுகளின் மின்னணு ஏலத்தில் உத்தராகண்டின் ஆன்மீக பாரம்பரியம் பிரதிபலிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 1:02PM by PIB Chennai

தேவபூமி என்று போற்றப்படும்  உத்தராகண்டின் அடையாளத்தை, பிரதமருக்கு அளிக்கப்பட்ட நினைவு பரிசுகளின் மின்னணு ஏலத்தின் 8-வது பதிப்பில் இடம்பெற்றுள்ள 27 பொருட்கள் பிரதிபலிக்கின்றன. பிரதமருக்கு அளிக்கப்பட்ட இப்பரிசுகளில் கலைப்படைப்புகள், புகைப்படங்கள், கோயில் மாதிரிகள், இதர நினைவுப்பொருட்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இவை நம்பிக்கை, கலை, கலாச்சார சூழலுக்கிடையேயான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் நமாமி கங்கை திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.  

உத்தராகண்டின் புனிதமிக்க  வழிபாட்டுத்தளங்களில் சிலவற்றை நான்கு கோயில் மாதிரிகள் குறிக்கின்றன. அவற்றில் ஸ்ரீ கேதர்நாத் கோயிலின் இரண்டு மாதிரிகள், உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயில் மாதிரி,  முக்பாவில் உள்ள கங்கா கோயிலின் மரத்தாலான மாதிரி ஆகியவை அடங்கும் அவையனைத்தும் அம்மாநிலத்தின் கலாச்சார வாழ்வில் உள்ள புனிதப்பயணம், பக்தி ஆகியவற்றுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322678&reg=3&lang=1

***

SS/IR/PS/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324283) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Punjabi , English , Urdu , Assamese , Gujarati , Telugu