பிரதமர் அலுவலகம்
இந்தியா - கனடா இடையேயான உறவுகளில் நிலவும் சாதகமான சூழலை பலன்களாக மாற்றுவது அவசியம்: பிரதமர் திரு நரேந்திர மோடி
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 6:56PM by PIB Chennai
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி அனிதா ஆனந்த் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, மக்கள் தொடர்பு, பன்முக ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பிரதமரும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் விவாதித்தனர்.
இருதரப்பு உறவுகளில் நிலவும் இத்தகைய சாதகமான சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவாக நிறைவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், அதனை உறுதியான பலன்களாக மாற்றுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கனடா பிரதமர் திரு கார்னிக்குத் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவருடனான நட்புறவு, ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323495®=3&lang=1
(Release ID: 2323495)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323614)
வருகையாளர் எண்ணிக்கை : 10