பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் நலன், நவீன வேளாண் வசதிகள், வேளாண்துறைக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2026 4:19PM by PIB Chennai

நாட்டின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வளமை ஆகியவற்றின் தூண்களாக நமது விவசாய சகோதர, சகோதரிகள் திகழ்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் போன்ற முன்முயற்சிகள், விவசாயிகளின் வருவாய்க்கு பாதுகாப்பு அளித்து வேளாண்மையை வலுப்படுத்துவதாகவும், அதேபோல் விவசாயிகளுக்கான பிரதமரின் சூரியசக்தி மின்திட்டம் எளிதில் சூரியசக்தியை வழங்குவதன் மூலம் வேளாண் செலவுகளைக் குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் ஆகியோருக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதற்கு வேளாண் கடன் அட்டை மிகவும் பயனுள்ளது என்றும், விதை முதல் சந்தை வரை என்ற முன்முயற்சி, அவர்களுடைய விளை பயிர்களுக்கு நியாயமான விலையை திறம்பட உறுதி செய்வதாகவும் திரு மோடி கூறியுள்ளார்.

விவசாயிகளின் நலன், உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அதனால் அவர்களுக்கு நவீன வேளாண் வசதிகளை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ட்ரோன்கள், மண்வள அட்டைகள், இயற்கை உரங்கள் தொடர்புடைய இயக்கங்கள், விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்க மிகவும் உதவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271632&reg=3&lang=1

----

TV/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323550) வருகையாளர் எண்ணிக்கை : 3