இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் பாரம்பரிய, பூர்வீக விளையாட்டுகள் 2026 அகமதாபாத்தில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:07PM by PIB Chennai

பிரிக்ஸ் பாரம்பரிய, பூர்வீக விளையாட்டுகள் 2026 குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரன்புராவில் உள்ள வீர்சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் 2026 அக்டோபர் 12 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் பாரம்பரியம், கலாச்சார பன்முகத்தன்மை, மக்களுக்கிடையேயான உறவுகளை கொண்டாடும் வகையில் முக்கியப் பிரதிநிதிகள், பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளரகள், தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டிகளைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, எதிர்காலத்திற்கு ஏற்ற விளையாட்டு உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், நாட்டைக் கட்டமைப்பதில் இந்தியா விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

விளையாட்டு சார்ந்த சூழலை உருவாக்குவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322256&reg=48&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323192) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Malayalam