ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்தில் 2025 செப்டம்பரைவிட 2026 செப்டம்பரில் 6.14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 1:00PM by PIB Chennai

இந்திய ரயில்வே 2026 செப்டம்பரில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சரக்குப் போக்குவரத்தின் அளவு அதிகரித்துள்ளதோடு பல்வேறு முக்கிய சரக்கு வகைகளிலும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் சரக்குப் போக்குவரத்தில் நீடித்த வளர்ச்சி பதிவாகியது. இது பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ரயில் போக்குவரத்திற்கான தொடர்ச்சியான தேவையை பிரதிபலிக்கிறது.

சரக்குப் போக்குவரத்து அளவு 2025 செப்டம்பர் மாதத்தில் 127.52 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் 2026 செப்டம்பர் மாதத்தில் 135.35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 6.14 சதவீதம் அதிகமாகும்.

இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய சரக்கு வகைகள் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்தன. தானியங்கள் 25 சதவீதம், சிமெண்ட் மூலப்பொருள் 20 சதவீதம், உள்நாட்டு பெட்டகம் 10 சதவீதம், நிலக்கரி 9 சதவீதம், இதர சரக்குகள் 8.2 சதவீதம், கனிம எண்ணெய் 6 சதவீதம், எஃகு 5.5 சதவீதம், இரும்புத்தாது 5.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

2026 செப்டம்பர் மாதத்தில் மின் நிலையங்களுக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது. இது 11.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2025 செப்டம்பர் மாதத்தைவிட 2026 செப்டம்பர் மாதத்தில் சரக்குப் போக்குவரத்து வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1266 கோடி வருவாய் கிடைத்தது. மொத்தம் 833 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 833.7 மில்லியன் டன் சரக்குகளை இந்திய ரயில்வே கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் வளர்ச்சியாகும். சரக்குப் போக்குவரத்து வருவாயும் 3.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

***

(Release ID: 2322673)

AD/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322840) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada