மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நகர்ப்புற சேவை வழங்கல் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் நிகழ்நேர பன்மொழி தகவல் பரிமாற்ற வசதி
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 11:08AM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, 2026 அக்டோபர் 12 முதல் 23-ம் தேதி வரை, முசோரியில் நடைபெறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கான நகர்ப்புற சேவை வழங்கல் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் நிகழ்நேர பன்மொழி தகவல் பரிமாற்ற வசதியை ஏற்படுத்தியது. வெளியுறவு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் இயங்கும் சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் இத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இது பெரு, கம்போடியா, நைஜீரியா, கென்யா, பாலஸ்தீனம், லெபனான், காம்பியா, ஈக்வடர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமைப் பணிகள் அதிகாரிகளையும், பொதுத்துறை பிரதிநிதிகளையும் ஒன்றினைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322621®=3&lang=1
***
SS/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322691)
வருகையாளர் எண்ணிக்கை : 9