உள்துறை அமைச்சகம்
உற்பத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், புத்தொழில் நிறுவனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி போன்ற துறைகளில், புதிய உச்சங்களை இந்தியா எட்டி வருகிறது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 4:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'சேவை, அர்ப்பணிப்பு' பயணத்தின் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், ஓய்வறியாத உழைப்பு, அசாத்திய மன உறுதி, தேசமே முதன்மையானது என்ற வழிகாட்டும் கொள்கை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட சேவை, அர்ப்பணிப்பு மிக்க பயணத்தின் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி முதல் பெருங்கடல் வரை, உலகளாவிய தளங்கள் முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது,பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உற்பத்தி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், புத்தொழில் நிறுவனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் புதிய உச்சங்களை எட்டி, இந்தியா விரைவான வளர்ச்சி கண்டு வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320177®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322580)
வருகையாளர் எண்ணிக்கை : 12