சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்திய வனப்பணி அதிகாரிகள் சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு திறன்மிக்க வகையில் தலைமைப் பொறுப்பில் ஈடுபட வேண்டும்- மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 11:29AM by PIB Chennai
இந்திய வனப்பணியின் 3-ம் கட்ட இடைக்கால பணிப் பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் புதுதில்லியில் உரையாடினார்.
பல்வேறு மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்த இந்திய வனப்பணி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு யாதவ், நாட்டின் காடுகள், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் அவர்களுடைய பங்களிப்பைப் பாராட்டினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று போன்ற முன்முயற்சிகள், ஆரவல்லி பசுமைச் சுவர் போன்ற திட்டங்கள் மூலம் வன நலன் பாதுகாப்பு, காடுகள், மரங்களின் பரப்பளவு அதிகரிப்பு, கார்பன் சேமிப்பு, வன நிலம், சதுப்பு நிலம் பாதுகாப்பு, நிலப்பரப்பு சீரமைப்பு ஆகியவற்றில் நாட்டின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா – 2047 என்ற தொலைநோக்குப் பார்வையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மனிதன் – வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, பருவநிலை மாற்றம், வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் இடையே சமநிலையைக் கடைப்பிடித்தல் ஆகியவை அறிவியல்பூர்வமாகவும், சமூகப் பங்கேற்புடனும் அணுக வேண்டிய சவால்களாக அவர் அடையாளப்படுத்தினார். வனம், வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய வனப்பணி அதிகாரிகள், கள அளவில் சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு திறன்மிக்க வகையில் தலைமைப் பொறுப்பில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322088®=48&lang=1
***
SS/IR/LDN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322386)
வருகையாளர் எண்ணிக்கை : 5