நிலக்கரி அமைச்சகம்
மின் நிலையங்களுக்கான நிலக்கரி இருப்பு 18 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உள்ளது: நிலக்கரி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 10:00AM by PIB Chennai
இந்திய நிலக்கரி நிறுவனம் சார்பில், மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி பயன்பாடு சார்ந்த மின் நிலையங்களுக்கான நிலக்கரி இருப்பு 2026 செப்டம்பர் 29-ம் தேதியன்று 18.932 மில்லியன் டன்னாக இருந்தது. அக்டோபர் 10-ம் தேதியன்று நிலக்கரி இருப்பின் அளவு 18.205 மில்லியன் டன் என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தின் தேவை அதிகரிப்பால், நிலக்கரி இருப்பின் அளவு அக்டோபர் மாதத்தில் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிலையங்களுக்கு 2026 அக்டோபர் மாதம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.49 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் இருக்கும் என்றும், செப்டம்பர் மாதத்தில் இது நாலொன்றுக்கு 2.21 மில்லியன் டன்னாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாத்தில் முதல் 10 நாட்களுக்கு நாள்தோறும் 2.37 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நிலக்கரி விநியோகத்தின் அளவு சற்று அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை தடையின்றி விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய நிலக்கரி அமைச்சகம், இது தொடர்பாக, இந்தியா நிலக்கரி நிறுவனம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322065®=48&lang=1
***
SS/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322347)
வருகையாளர் எண்ணிக்கை : 8