பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு குறித்த துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 4:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 9, 2026 அன்று மாலை 4:30 மணியளவில் புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் மாளிகையில் நடைபெறும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு குறித்த துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துதல், தேசிய முன்னுரிமைகளில் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்த்தல் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் செயல் விளைவுகளை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த  துறைசார் உச்சிமாநாடு இரண்டாவது முறையாக நடைபெற்றி வருகிறது.

 

இந்த உச்சிமாநாடு நான்கு முக்கிய கருப்பொருள்களின் மீது கவனம் செலுத்துகிறது:

சிறந்த ஊட்டச்சத்து, தொடக்கக் கல்விக்காக அங்கன்வாடி மையங்களை மறுவடிவமைப்பு செய்தல்

 

பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழந்தைகளுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்

 

நிறுவன, சட்டக் கட்டமைப்புகளைத் திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்

 

முக்கியத் திட்டங்களின் செயல்திறன், விளைவுகளை மேம்படுத்துவதன் மூலம் பெண்களை அதிகாரப்படுத்துதல்.

 

துறைசார் உச்சிமாநாடு என்ற இந்த முன்முயற்சி, மத்திய, மாநில அரசுகளை ஒன்றிணைத்து, துறைசார் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், செயல்படுத்தலில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும், மேம்பட்ட நிர்வாகம், சேவை வழங்கலுக்கான காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320783&reg=3&lang=1

(Release ID: 2320783)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321084) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam