பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 7:29PM by PIB Chennai
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் சேவையாற்றியதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாட்-பிசெசாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான நட்பு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாகக் கூறிய பிரதமர், வரும் ஆண்டுகளில் இரு நாடுகளும் தங்கள் நட்புறவை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“பிரதமர் கமலா பெர்சாட்-பிசெசார் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான நட்பு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. வரும் ஆண்டுகளில் நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
@PM_Kamla”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320951®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321078)
வருகையாளர் எண்ணிக்கை : 4