ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் இளங்கலை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:04PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் இளங்கலை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புனே, யெவாலெவாடி பகுதியில் இயங்கும்  தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் நிசார்க் கிராம் வளாகத்தில் கல்வி பயில விண்ணப்பிக்கலாம். 2026-27-ம் கல்வி ஆண்டில் மொத்தம் 100 இடங்கள் உள்ள நிலையில், இப்படிப்பிற்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2026ல் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   2026 அக்டோபர் 19-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் இளங்கலை படிப்புக்கு தேர்ச்சி பெற்றவர்கள், காத்திருப்போர் பட்டியல் அக்டோபர் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.  கவுன்சிலிங் நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. வகுப்புகள் நவம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களை www.ninpune.ayush.gov.in. வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319947&reg=3&lang=1

***

TV/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2320290) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam