பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட அதிக உயரத்திலான இயங்குதளத்தில் விமான சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 3:33PM by PIB Chennai
உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட அதிக உயரத்திலான இயங்குதளத்தில் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தியது. இச்சோதனையின் போது விமானம் கடல் மட்டத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது. அத்துடன் தரைக்கு திரும்பி வருவதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும் வரை 30 நிமிடங்களுக்கு மேலாக 20 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது. பின்னர், இது வெற்றிகரமாக மீட்கப்பட்டு அதன் செயல்பாட்டு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
விமான செயல்பாட்டின் போது வான்வழியில் இருந்து நிகழ்நேர காணொளித் தரவுகள், இதர தகவல்கள் தரைகட்டுப்பாட்டு நிலையத்தில் பெறப்பட்டன. அவை எதிர்பார்த்த படியே விமானம் செயல்பட்டதைக் காட்டியது.
இந்த வெற்றிகரமான இந்த சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன குழுவினருக்கு பாதுகாப்பு துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319551®=3&lang=1
***
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320093)
வருகையாளர் எண்ணிக்கை : 8