சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுகாதாரத்திற்கான கூட்டுப் படை குழுக்கள் நாளை தொடங்கப்பட உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 10:05AM by PIB Chennai
காசநோய்க்கு எதிரான நாட்டின் நடவடிக்கைகளை சமூக பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து சுகாதாரத்திற்கான கூட்டுப் படை குழுக்களை மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 அக்டோபர் 8 அன்று தொடங்க உள்ளது. முதற்கட்டமாக இளையோர் தலைமையிலான சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் வகையிலும் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் நோக்கத்தை அடிப்படை அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் 11 மாநிலங்களில் உள்ள 55 மாவட்டங்களில் சுகாதாரத்திற்கான கூட்டுப் படைக் குழுக்கள் செயல்படும்.
இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமைத் தாங்குகிறார். அப்போது காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் முக்கிய சாதனை அம்சங்கள் காணொளி வாயிலாக திரையிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து சுகாதாரத்திற்கான கூட்டுப் படைக் குழுக்கள் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். அத்துடன் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்திற்கானப் புதிய தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்புச் சார்ந்த உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319900®=3&lang=1&_gl=1*11rwi1j*_up*MQ..*_ga*MTQzMjEwNzc2MC4xNzkxMzUxMzk2*_ga_Q414Y0X6EE*czE3OTEzNTEzOTYkbzEkZzAkdDE3OTEzNTEzOTYkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTEzNTEzOTYkbzEkZzAkdDE3OTEzNTEzOTYkajYwJGwwJGgw
***
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319969)
வருகையாளர் எண்ணிக்கை : 9