பாதுகாப்பு அமைச்சகம்
முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 12:50PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், ஐந்தாவது கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியையும் தொடங்கி வைத்த அவர், மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே-4 ,300 டன் திறன் கொண்ட கோலியாத் கிரேன் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடற்படை ஆதரவுக் கப்பல்-1 திட்டம் சாதனையின் சின்னம் என்றும் கடற்படை ஆதரவுக் கப்பல்-5-ன் தொடக்கம் நமது உறுதியின் அடையாளம் என்றும், புதிய ஸ்லிப்வே நமது வளர்ந்து வரும் உற்பத்தித் திறனின் சான்று என்றும் குறிப்பிட்டார். இந்தக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படையின் செயல்திறனையும், தொலைதூர கண்காணிப்பு மற்றும் தளவாடப் பராமரிப்புத் திறன்களையும் பெருமளவில் மேம்படுத்தும் என்றம் கூறினார்.
இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் சர்வதேச அளவில் தரம், தொழில் நுட்பம், குறித்த நேரத்தில் விநியோகம் செய்வதில் போட்டிதன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். ஆந்திரப் பிரதேசத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து விசாகப்பட்டினத்தை ஒரு முதன்மை கடல்சார் தொழில் மையமாக மாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319481®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319764)
வருகையாளர் எண்ணிக்கை : 16