சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கூட்டுக் கார்பன் படிம வழிமுறைக்கான செயல்பாட்டு கையேட்டை இந்தியாவும் ஜப்பானும் வெளியிட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 8:26PM by PIB Chennai
2026 செப்டம்பர் 30 அன்று, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கெய்ச்சி ஓனோவும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அப்போதைய செயலாளர் திரு தன்மய் குமாரும் இணைந்து, இந்திய-ஜப்பான்கூட்டுக் கார்பன் படிம வழிமுறைக்கான செயல்பாட்டு கையேட்டை புதுதில்லியில் வெளியிட்டனர்.
இந்தியா- ஜப்பான் இடையிலான கூட்டுக் கரிமப் படிம வழிமுறை, மேம்பட்ட குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், காலநிலை நிதியைத் திரட்டுதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை எளிதாக்குதல், இந்தியாவில் உயர் நம்பகத்தன்மை கொண்ட உமிழ்வு குறைப்புகள் மற்றும் அகற்றல்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழிமுறை, சர்வதேச கார்பன் சந்தைகளில் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
2025 ஆகஸ்ட் 7 அன்று ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது; 2026 ஜூன் 8 அன்று அமலாக்க விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2-ன் கீழ் இந்தியா, ஜப்பான் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதில் இந்தக் கையேட்டின் வெளியீடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319373®=3&lang=1
***
TV/BK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319623)
வருகையாளர் எண்ணிக்கை : 7