மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 APR 2026 3:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,  மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2026 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 58% என்ற விகிதத்தை விட 2% கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6791.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253244&reg=48&lang=2

----

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319599) வருகையாளர் எண்ணிக்கை : 30