மத்திய அமைச்சரவை
பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2026 3:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கடல்சார் காப்பீட்டுப் பாதுகாப்புகளை எளிதாக்கும் வகையில், ரூ.12,980 கோடி உத்தரவாதத்துடன் 'பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு உள்நாட்டுக் காப்பீட்டுக் கூட்டமைப்பை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பு, இந்தியத் துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் வரும் கப்பல்களுக்கும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து சர்வதேச இடங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கும் குறைந்த செலவில் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்கிறது.
உலகளாவிய நிலையற்ற தன்மையாலும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையாலும், கடல்வழி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சரக்கு கப்பல்களுக்கு ஏற்படும் இழப்புகளின் அபாயம் அதிகரித்து, காப்பீட்டுச் செலவுகள் உயர்ந்துள்ளன. காப்பீடு தொடர்ந்து கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. காப்பீட்டிற்காக, இந்தியக் கப்பல்கள் சர்வதேச பாதுகாப்பு, இழப்பீட்டுக் குழுமத்தை பெரிதும் சார்ந்துள்ளன. இந்நிலையில் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக காப்பீடு திரும்பப் பெறப்படும் நிலையில், இறையாண்மையையும் வர்த்தகத் தொடர்ச்சியையும் பராமரிக்க ஒரு உள்நாட்டு கடல்சார் இடர் காப்பீட்டுத் தொகுப்பின் தேவை ஏற்பட்டதால் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253242®=48&lang=2
------
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319597)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam