பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா, பவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 10:30PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் குழுப் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா, பவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ஒரு பெருமைக்குரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டியில் அவர்களது கவனமும், குழுப்பணியும் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும், பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒரு பெருமைக்குரிய சாதனை!

ஆடவர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் குழுப் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற, இந்தியாவின்  அனந்த்ஜீத் சிங் நருகா, பவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான் ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியின் மீதான அவர்களது முழு கவனமும், குழுப்பணியும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அவர்களது  எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர்".

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314221&reg=3&lang=1  

***

TV/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2319552) வருகையாளர் எண்ணிக்கை : 14