கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரத்திற்கு பிறகு அசாமில் இருந்து பங்களாதேஷிற்கு சரக்குப் போக்குவரத்து தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 4:02PM by PIB Chennai

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அசாம் மாநிலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அசாம் மாநிலம், திப்ருகர் பகுதியில் உள்ள போகிபீல் சரக்கு முனையத்திலிருந்து, பங்களாதேஷில் உள்ள டாக்காவுக்கு நீர்வழி சரக்குப் போக்குவரத்து தொடங்கி உள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிபோக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், சரக்கு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நீர்வழி சரக்குப் போக்குவரத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், 1956-ம் ஆண்டுக்கு பிறகு இப்பகுதியில் நீராவி படகின் சத்தம் தற்போது மீண்டும் கேட்பதாக பெருமிதம் தெரிவித்தார். வங்கதேசத்திற்குச் சரக்கு போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், சர்வதேச அளவில் அசாமின் வர்த்தகம் உயரும் என்றும் குறிப்பிட்டார். சரக்கு போக்குவரத்தால், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையும் எனவும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

அசாமிலிருந்து பங்களாதேஷ் செல்லும் சரக்கு கப்பலில், 540 மெட்ரிக் டன் மெத்தனால் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த சரக்கு கப்பல் சுமார் 1300 கிலோ மீட்டர் பயணம் செய்து டாக்காவை சென்றடையும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319146&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319341) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Bengali-TR , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Malayalam