நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்று சோதனை நடவடிக்கைகளில் 15.59 கிலோ எடையிலான போதைப்பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2026 9:05PM by PIB Chennai

மத்தியப்பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) 2026 செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மேற்கொண்ட மூன்று தனித்தனி நடவடிக்கைகளில், 15.59 கிலோ எடையிலான ஆம்பெடமைன், கொக்கைன், ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று நடந்த ஒரு பரபரப்பான நடவடிக்கையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன்-தேவாஸ் சுங்கச்சாவடியில், ஆம்பெடமைன் போதைப்பொருளை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு மஹிந்திரா தார் வாகனத்தை, டிஆர்ஐ மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இடைமறித்தனர். வாகனத்தை நிறுத்த சைகை காட்டியதும், ஓட்டுநர் தடுப்பை உடைத்துக்கொண்டு வேகமாகச் சென்றார். சுமார் 1.5 மணி நேரம் அதிகாரிகள் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து, இந்தூரில் உள்ள பிச்சோலி மர்தானா அருகே அதை மடக்கிப் பிடித்தனர். வாகனத்தை சோதனையிட்டபோது, வாகனத்தின் பின்பக்கக் கதவில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் டயருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.116 கிலோ எடையிலான ஆம்பெடமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318942&reg=3&lang=1

***

TV/RB/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2319125) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Telugu