கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களின் மின் ஏலம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 2:13PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட தனித்துவமான பரிசுகளையும் கலைப்பொருட்களையும் கொண்ட 'பிஎம் மெமென்டோஸ்' என்ற ஏலத்தின் 8-வது பதிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் 2026 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில், தில்லியின் பன்முகப் பரிமாணங்களை வெளிக்காட்டும் 30 விதமான நினைவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பொது ஏலத்திற்குத் திறக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, பலதரப்பட்ட கலைப்படைப்புகள், வழிபாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையாக உள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கப்படும்.
தில்லி சார்ந்த 30 பரிசுப் பொருட்களில் ஓவியங்கள், சிலைகள், சிற்பங்கள் அடங்கியுள்ளன. இந்தத் தொகுப்பில் இரண்டு தில்லி மெட்ரோ மாதிரிகள், ஒரு விளையாட்டு நினைவுப் பொருள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.
இந்தத் தொகுப்பில் இந்தியாவின் மதப் பாரம்பரியங்களுடன் தொடர்புடைய பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான்கு பொருட்கள் ராமர் அல்லது ராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன. இந்தத் தொகுப்பில் பௌத்த மதத்தின் எட்டு மங்கள சின்னங்களின் உருவமும் அடங்கியுள்ளது.
ஏலத் தேதிகள், பங்கேற்பு விவரங்கள் முழுமையான விவரப்பட்டியலுக்கு, அதிகாரப்பூர்வ மின்-ஏல இணையதளமான pmmementos.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318151®=3&lang=1
********
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318648)
வருகையாளர் எண்ணிக்கை : 8