பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செபக்டக்ரோ பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் குவாட்ரண்ட் அணிக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 6:09PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செபக்டக்ரோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் ஆடவர் குவாட்ரண்ட் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்று பிரதமர் குறிப்பிட்டார். அணியினரின் உறுதியும், போராடும் மனப்பான்மையும் முன்மாதிரியாக அமைந்ததாக அவர் கூறினார்.
இந்தச் சாதனை நாடு முழுவதும் செபக்தக்ரா விளையாட்டுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்று திருமோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“இந்திய செபக்தக்ரா விளையாட்டில் ஒரு முக்கிய சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குவாட்ரண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இப்போட்டிகளில் ஆடவர் குவாட்ரண்ட் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். வீரர்கள் முன்மாதிரியான உறுதியுயைம் போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தினர். இந்தச் சாதனை நாடு முழுவதும் செபக்தக்ரா விளையாட்டுக்கு மேலும் ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318267®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318583)
வருகையாளர் எண்ணிக்கை : 6