பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற அங்குஷிற்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 6:13PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவின் இறுதிப் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்ற அங்குஷிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அங்குஷின் ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும் போற்றத்தக்கவை என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் குத்துச்சண்டை பயணம் மிகச் சிறப்பான முறையில் நிறைவடைவதை அங்குஷின் இந்த வெற்றி உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“அங்குஷிற்கு தங்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவின் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் வென்ற அங்குஷிற்கு வாழ்த்துகள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கவை. அவரது இந்த வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் குத்துச்சண்டை பயணம் மிகச் சிறப்பாக நிறைவடைவதை உறுதி செய்கிறது: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318272®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318581)
வருகையாளர் எண்ணிக்கை : 7