பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
தில்லியில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 3:15PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வரிகள் உட்பட ரூ.1,789.52 கோடி மதிப்பீட்டில் தில்லி காவல்துறையால் செயல்படுத்தப்பட உள்ள போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் சுமூகமானப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ஏதுவாக இத்திட்டத்தின் கீழ், 42 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 24 மாதங்களில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளும், பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
தில்லியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் அதற்கான உள்கட்டமைப்பு, நகர்ப்புறப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசும், தில்லி அரசும் மேற்கொண்டு வரும் விரிவான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிகழ்நேரப் போக்குவரத்து குறித்தத் தரவுகள், சீரானப் போக்குவரத்துக்கான சிக்னல்கள், தானியங்கி விதிமுறை அமலாக்கம், ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற வசதிகளைக் கொண்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப சாலைப் போக்குவரத்தைத் திறம்பட நிர்வகிக்க இத்திட்டம் உதவிடும்.
தலைநகர் தில்லியில் 71 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கத்தைக் காட்டிலும், வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சீரானப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசும், தில்லி அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316953®=3&lang=1
***
SS/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317197)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam