வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான 50 மாதிரி நகரங்களை உருவாக்கும் பிரகதி-50 திட்டத்தை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் இன்று தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 3:51PM by PIB Chennai

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தூய்மைக்கான 50 மாதிரி நகரங்களை உருவாக்கும் பிரகதி-50 திட்டத்தை அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் 24 மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 50 நகரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் பிற பகுதிகளுக்கு தூய்மைக்கான முன்மாதிரி நகரகங்களாக திகழும் வகையில் உயர் தரநிலையை மேம்படுத்துவதை இத்திட்டத்தின் நோக்கமாகும் என்பதை அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான துப்புரவு பணிகளுடன் நிலையான உயர்செயல்திறன் கொண்ட தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின கீழ் முக்கியத்துவம் வாய்ந்த நகரகங்கள் சுற்றுலாத்தளங்கள், பொருளாதார மையங்கள் இணைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு செயல்முறையின் மூலம் நகர்ப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, துப்புரவுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று  அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316495&reg=3&lang=1

 

***

TV/SV/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2316870) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Kannada