தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

எஸ்ஐஆர் உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த தீர்மானங்களின் விளைவாகும் : இந்தியத் தேர்தல் ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 3:29PM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பின் பிரிவு 324, சட்டரீதியான விதிகள், நிறுவப்பட்ட நிறுவன மரபுகளின் கடுமையான வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படும் ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இந்த ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டங்கள், ஆணையம் ஆகியவற்றின்  அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

ஆணையத்தால் வெளியிடப்படும் அனைத்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள், முடிவுகள், நிர்வாக வழிகாட்டுதல்கள் ஆகியவை முழுமையான சட்ட அங்கீகாரத்தைக் கொண்டுள்ளன. வரைவு நிலைகளின் போது ஆணைய உறுப்பினர்களால் எழுப்பப்படும் செயல்பாட்டு ரீதியான கேள்விகள் அல்லது கருத்துகள், வாக்காளர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நிலையான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகும். தேர்தல் செயல்முறைகளை மேலும் மேம்படுத்துவதற்காகவே ஆணையர்களால் இத்தகைய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

எந்தவொரு நிறுவனத்திலும் விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகளும் வெளிப்படுவது இயல்பான ஒன்றாகும். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகவே இவை அமைகின்றன. மூன்று ஆணையர்கள் மட்டுமல்லாமல், தேர்தல் முறையை மேம்படுத்துவது குறித்து ஆணையத்திற்குத் தங்கள் ஆலோசனைகளை வழங்க ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் முழு அதிகாரம் பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களில், நாடு முழுவதும் எஸ்ஐஆர் உட்பட வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பல தேர்தல் சீர்திருத்தங்களை ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் அனைத்தும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் விளைவாகவே அமைந்துள்ளன.

இக்காலகட்டத்தில் பீகார், கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில்  முக்கியத் தேர்தல்களையும், தேர்தல் தொடர்பான பணிகளையும் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313884&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316655) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Odia , Malayalam