தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தி மாதத்தை முன்னிட்டு மும்பை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 6:18PM by PIB Chennai
இந்தி மாதத்தை முன்னிட்டு, மும்பை பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நவ்பாரத் டைம்ஸ் நாளிதழின் வணிகப் பிரிவு ஆசிரியர் திருமதி சுதா ஸ்ரீமாலி கலந்து கொண்டு "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்தி இதழியலின் பங்களிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மும்பை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய தகவல் தொடர்பக அதிகாரிகளும், ஊழியர்களும் இணையவழியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமதி சுதா, துல்லியமான தகவல்களை எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அவை வெறும் தகவல்களாக மட்டும் நின்றுவிடாமல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒரு உந்துசக்தியாக மாறுவதாகக் கூறினார். தகவல் பரிமாற்றம் என்பது அரசிடமிருந்து ஊடகங்களுக்கும், அங்கிருந்து பொதுமக்களுக்கும் செல்லும் ஒரு வழிப்பாதையாக மட்டும் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஊடகங்களின் கருத்துக்களை மீண்டும் அரசிற்குக் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மேற்கு மண்டல தலைமை இயக்குநர் திருமதி ஸ்மிதா வத்ஸ் சர்மா, போபால் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குனர் திரு மணீஷ் கவுதம் ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316128®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316275)
வருகையாளர் எண்ணிக்கை : 8