நிதி அமைச்சகம்
தணிக்கைக்குட்பட்ட வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 5:19PM by PIB Chennai
வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 139 உட்பிரிவு 1-ன் கீழ் 2026-27-ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31-ம் தேதி ஆகும்.
தணிக்கைக்குட்பட்ட நபர்களுக்கான 2026-27-ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், தணிக்கைக்குட்பட்ட நபர்களின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்ர் 30-ம் தேதியிலிருந்து அக்டோபர் 21-ந் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316050®=3&lang=1
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316227)
வருகையாளர் எண்ணிக்கை : 14